

சீமாந்திராவின் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவுக்கு ரூ. 10 கோடி செலவில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.
சீமாந்திராவின் (தெலங்கானா மாநிலப் பகுதியை தவிர்த்த ஆந்திரப் பிரதேசம்) முதல் முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 8-ம் தேதி பதவியேற்க உள்ளார். விஜயவாடா-குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் இவ்விழா நடைபெறுகிறது.
முதலில் ரூ. 5 கோடியில் இவ்விழாவினை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது, விழாவுக்கான செலவு இரண்டு மடங்காகி உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படு கிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், திருப்பதியில் உள்ள வெங்க டேஸ்வரா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக சந்திரபாபு நாயுடுவை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.