“எலிசபெத் ராணிக்கு காந்தி பரிசளித்த கைக்குட்டை” - புகழஞ்சலியில் நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி, இங்கிலாந்து ராணி எலிசபெத் | கோப்புப் படம்
பிரதமர் மோடி, இங்கிலாந்து ராணி எலிசபெத் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: “இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் ராணியின் அன்பையும், வர்வேற்பையும் என்றும் மறக்க முடியாது” என்று குறிப்பிட்டு, அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "சமகாலத்தில் வாழ்ந்த ஒரு வலிமையான தலைவரான இரண்டாம் எலிசபெத் ராணியை என்றென்றும் நமது நினைவுகளில் நிலைத்திருப்பார். தேசத்திற்கும், மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைவராக திகழ்ந்தவர். பொது வாழ்வில் கண்ணியத்தையும், நேர்மையையும் கடைபிடித்தவர். அவருடைய மறைவால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது சிந்தனைகள் அவருடைய குடும்பம் மற்றும் பிரிட்டன்வாழ் மக்களோடு இருக்கின்றன.

கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் என்னுடைய பிரிட்டன் பயணங்களின்போது இரண்டாம் எலிசபெத் ராணியை சந்தித்த அனுபவங்கள் எளிதில் மறக்க இயலாது. அவருடைய வரவேற்பையும், அன்பையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. எங்களது ஒரு சந்திப்பில் அவருடைய திருமணத்திற்கு மகாத்மா காந்தி பரிசாக வழங்கிய கைக்குட்டையை என்னிடம் காண்பித்தார். அந்த நிகழ்வை என்றென்றும் நினைவில் கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in