2020-ல் அதிக விபத்துகளுக்கு அதிவேகப் பயணமே காரணம்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்

2020-ல் அதிக விபத்துகளுக்கு அதிவேகப் பயணமே காரணம்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

இந்தியாவில் சாலை விபத்துகள் - 2020 என்ற தலைப்பில் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு முக்கிய போக்குவரத்து விதிமீறலாக அதிவேகப் பயணம் உள்ளது. நாட்டில்கடந்த 2020-ம் ஆண்டில் அதிவேகப் பயணம் காரணமாக 2,65,343 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதனால் 91,239 பேர் இறந்துள்ளனர். சாலையில் தவறான திசையில் பயணம் காரணமாக 20,228 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 7,332 பேர் இறந்துள்ளனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதால் 8,355 விபத்துகள் ஏற்பட்டு, 3,322 பேர் இறந்துள்ளனர்.

மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியதால் 6,753 விபத்துகள் ஏற்பட்டு, 2,917 பேர் இறந்துள்ளனர். 2020-ல்நடந்த சாலை விபத்துகளில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகளில் 69.3 சதவீதம் அதிவேகப் பயணத்தால் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in