

திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவில் உள்ள மத்திய சிறையிலிருந்து ஆயுள் கைதிகள் மூன்று பேர் தப்பியோடினர்.
அவர்களைத் தேடும் பணியில் போலீஸாருடன், துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தம் போவ்மிக் கூறும்போது, "திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவில் உள்ள மத்திய சிறையில் இருந்து 3 ஆயுள் கைதிகள் தப்பியுள்ளனர்.
வழக்கம்போல் கைதிகளை கணக்கெடுக்கும்போது ஸ்வர்ண திரிபுரா, மிலோன் தேபர்மா, ரபீந்திர திரிபுரா ஆகிய 3 பேர் மட்டும் காணாமல்போனது தெரியவந்தது.
அவர்கள் மூவருமே வெவ்வேறு கொலை சம்பவங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். சிறையில் இருந்து தப்பி ஓடிய அவர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேடுதல் பணியில் துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அகர்தலாவில் இருந்து புறப்படும், நின்று செல்லும் அனைத்து ரயில்களிலும் கடுமையான சோதனை மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.