

ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுயில் பாகிஸ்தான் படையினரின் வரம்புமீறிய தாக்குதலில் பிஎஸ்எப் வீரரும் 6 வயது சிறுவனும் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள ஆர்.எஸ்.புரா, ஆர்னியா, சச்சேத்கார், கானாசாக், பர்க்வால் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட ராணுவ சாவடிகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு தாக்குதலை தொடங்கினர். தானியங்கி துப்பாக் கியால் சரமாரியாக சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் நேற்று பகலிலும் தாக்குதலைத் தொடர்ந் தனர். இதற்கு இந்தியத் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது.
இந்நிலையில் குடியிருப்புகள் மீதான பாகிஸ்தானின் வரம்பு மீறிய இத்தாக்குதலில் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள லலியால் என்ற கிராமத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் பிஎஸ்எப் தரப்பில் சுசீல்குமார் என்ற காவலர் உயிரிழந்தார். மேலும் பிஎஸ்எப் வீரர் உட்பட 9 பேர் காயமடைந்தார்.
இவர்கள் அனைவரும் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இவர்களில் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
19 இந்திய வீரர்களைப் பலி கொண்ட உரி ராணுவ முகாம் மீதான தீவிரவாதிகளின் தாக்கு தலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் பிறகு எல்லை யில் 40-க்கும் மேற்பட்ட முறை பாகிஸ்தான் அத்துமீறிய தாக்குத லில் ஈடுபட்டுள்ளது.
பாக். ராணுவம் செய்தி
இதனிடையே இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் பகுதி யில் சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது.
“ஹர்பால், புக்லியன், சார்வாஹ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய வீரர்கள் ஆத்திரமூட்டும் வகையில் தாக்குதல் நடத்தினர். இதில் ஜங்லோரா என்ற கிராமத் தில் ஒன்றரை வயது சிறுமி உட்பட 2 பேர் இறந்தனர்” என்று பாகிஸ் தான் ராணுவம் கூறியுள்ளது.
இதனிடையே 3 நாள் பயண மாக பஹ்ரைன் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிஎஸ்எப் தலைமை இயக்குநர் கே.கே.சர்மாவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் எல்லை நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் ராஜ்நாத் விடுத்துள்ள செய்தியில், “ஜம்மு பிராந்தியத்தில் எல்லை நிலவரம் குறித்து சர்மா விளக்கி னார்.
பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கும் திறன் பிஎஸ்எப் வீரர்களுக்கு உள்ளது. பாக். தாக்கு தலில் வீரமரணம் அடைந்த பிஎஸ்எப் வீரர் சுசீல் குமாரின் துணிவு மற்றும் தியாகத்தைப் போற்றுகிறேன்” என்று கூறி யுள்ளார்.