

டெல்லி நொய்டாவைச் சேர்ந்த நரேஷ் சந்த் குப்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சுகளால் மனிதர்களுக் கும் பிற உயிரினங்களுக்கும் உடல் நலக் கோளாறு ஏற்படும் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
எனவே, செல்போன் கோபுரங் கள் உமிழும் கதிர்வீச்சின் அள வைக் குறைக்கவும், அதனைக் கண் காணிக்கவும் ஓர் அமைப்பை ஏற் படுத்த வேண்டும். மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு கடும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும்” என கோரியிருந்தார்.
இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், நீதிபதிகள் சி.நாகப்பன், ஏ.எம்.கான்வில்கர் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “செல் போன் கோபுர கதிர்வீச்சுகளின் மோசமான தாக்கம் என்ன? அதைக் கண்காணிக்க ஏதேனும் அமைப்பு உள்ளதா? உங்களிடம் (தொலைத் தொடர்புத் துறை) செல்போன் கோபுர கதிர்வீச்சுகள் தொடர்பான தர நிலைகள் உள்ளனவா? எனக் கேள்வியெழுப்பினர். மேலும், செல்போன் கோபுர கதிர்வீச்சு களின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட் டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யும் படி, தொலைத்தொடர்புத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் பி.எஸ். பட்வாலியா வுக்கு உத்தரவிட்டனர்.
இந்தியாவில் உள்ள செல்போன் கோபுர கதிர்வீச்சு, சர்வதேச தர நிலைக்கு உட்பட்டுள்ளதா எனவும் தொலைத்தொடர்புத் துறையிடம் கேள்வி எழுப்பினர்.
இதுவரை இந்தியாவில் நிறுவப் பட்டுள்ள செல்போன் கோபுரங் களின் எண்ணிக்கை, அவற்றைத் தொலைத்தொடர்புத் துறை பரிசோதித்துள்ளதா என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
மனுதாரர் தரப்பில் பிரசாந்த் பூஷண், “செல்போன் கோபுரங்கள் மக்கள் வாழிடங்களிலும், பள்ளி களுக்கு அருகிலும் நிறுவப்பட்டுள் ளன” எனக் கூறினார். இதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது தொடர்பாக அரசு விதிமுறைகள் ஏதேனும் வகுத்துள்ளதா. இதுவரை எவ்வளவு விதிமீறல்கள் பதிவு செய் யப்பட்டுள்ளன எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அனைத்து செல்போன் கோபுரங் களும் கதிர்வீச்சு தர நிலைக்கு உட்பட்ட செயல்படுவதை மத்திய அரசு காலக்கெடு விதித்து உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி கள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.