ஷபனா ஆஸ்மி ‘ஸ்லீப்பர் செல்’: ம.பி. அமைச்சர் புகார்

ஷபனா ஆஸ்மி ‘ஸ்லீப்பர் செல்’: ம.பி. அமைச்சர் புகார்
Updated on
1 min read

போபால்: மத்திய பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா போபாலில் நேற்று கூறியதாவது:

பில்கிஸ் பானு விவகாரத்தில் நடிகை ஷபனா ஆஸ்மி, நடிகர் நஸ்ருதீன் ஷா, பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆகியோர் இரட்டை வேடம் போடுகின்றனர். ராஜஸ்தானில் தையல்கடை காரர் கண்ணையா கொலை செய்யப்பட்டார். ஜார்க்கண்டின் தும்கா பகுதியில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நடிகை ஷபனா ஆஸ்மி உள்ளிட்டோர் எந்த கருத்தும் தெரிவிககவில்லை,

பாஜக ஆளும் மாநிலங்களில் ஏதாவது நடந்தால் மட்டும் இவர்கள் குரல் எழுப்புகின்றனர். இவர்கள் துக்கடா, துக்கடா கும்பலின் ரகசிய உறுப்பினர்கள். ‘ஸ்லீப்பர் செல்’கள். இவ்வாறு அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in