ரேஷன் கடையில் பிரதமர் படம் ஏன் இல்லை? - மாவட்ட ஆட்சியரை உலுக்கி எடுத்த நிர்மலா சீதாராமன்

ரேஷன் கடையில் பிரதமர் படம் ஏன் இல்லை? - மாவட்ட ஆட்சியரை உலுக்கி எடுத்த நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

ஹைதராபாத்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள பேனரில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், நிர்மலா சீதாராமன் கேட்டார். மேலும் அவர் கேட்ட பல கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெரியவில்லை என்று பதில் கூறினார்.

இதனால், கோபமடைந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு சார்பில் மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஒரு கிலோ சுமார் ரூ. 35 வரை விலை இருக்கும். இதனை மக்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் வாங்கி கொள்கின்றனர்.

மாநில அரசு ரூ.3.30 ஒரு கிலோவுக்கு செலவு செய்கிறது. மீதமுள்ள ரூ.30.70 காசுகள் மத்திய அரசு செலவு செய்கிறது. போக்குவரத்து செலவை கூட மத்திய அரசே ஏற்கிறது. ஆனால், தெலங்கானாவில் இந்த அரிசியை மாநில அரசே மக்களுக்கு வழங்குவதாக கூறிக் கொள்கிறது.

கரோனா சமயத்தில், மத்திய அரசு அரிசியை இலவசமாக வழங்கியது. ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு ஒன்றுமே தெரியவில்லை.

மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் வைப்பேன். ஐஏஎஸ் படித்து, மத்திய அரசுக்கு விஸ்வாசமாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?” என கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in