காஷ்மீரில் ஊடுருவ ஏணி பயன்படுத்திய தீவிரவாதிகள்: உரி தாக்குதல் விசாரணையில் புதிய தகவல்

காஷ்மீரில் ஊடுருவ ஏணி பயன்படுத்திய தீவிரவாதிகள்: உரி தாக்குதல் விசாரணையில் புதிய தகவல்

Published on

உரி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ் தான் தீவிரவாதிகள் 4 பேரும், எல்லையில் உள்ள மின்வேலியை கடக்க ஏணியைப் பயன்படுத்தி இருக்கும் தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள ராணுவ தலைமைய கத்துக்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் 4 பேர் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியதில், 19 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 7 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தி அழித்தது.

இதைத் தொடர்ந்து எல்லை யில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியையும், பாதுகாப்பு படை யினரின் ரோந்து நடவடிக்கையை யும் மீறி, அந்தத் தீவிரவாதிகள் எப்படி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவினர், எந்த வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்பது குறித்து ராணுவம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் எல்லையில் உள்ள சலமாபாத் நல்லா என்ற பகுதி வழியாக அவர்கள் ஊடுருவி இருப்பதும், அங்கிருந்த மின் வேலியை கடக்க ஏணியை பயன் படுத்தியிருப்பதும் தெரியவந் துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ராணுவ உயரதி காரி ஒருவர் கூறியதாவது:

அந்த 4 தீவிரவாதிகளில் ஒருவர் மட்டும் சலமாபாத் நல்லா பகுதியில் இருந்த வேலியின் இடை வெளிக்குள் புகுந்து இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி ஒரு ஏணியை வைத்துள்ளார். பாகிஸ்தான் பகுதியில் இருந்த மற்ற 3 தீவிர வாதிகளும் தங்களிடம் இருந்த ஏணியுடன், இந்தியப் பகுதியில் இருந்த ஏணியை கட்டி வைத்து, பாதசாரிகள் பாலத்தைப் போல உருவாக்கியுள்ளனர். பின்னர் அதன் மீது ஏறி அவர்களும் இந்தியாவுக்குள் ஊடுருவியுள் ளனர். முதல் தீவிரவாதி மின் வேலியின் இடைவெளியை பயன் படுத்தி ஊடுருவியது போல மற்ற தீவிரவாதிகளால் ஊடுருவ முடியவில்லை. காரணம் அவர் களிடம் தாக்குதலுக்கான வெடிப் பொருட்கள், ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவை இருந்தன. அவற்றுடன் இடை வெளியைப் பயன்படுத்தி எல்லையைக் கடக்க முடியாது. மேலும் இந்திய ராணுவத்தின் ரோந்து வீரர்களின் பார்வையிலும் சிக்கிக் கொள்ள நேரிடும். எனவே குறைந்த நேரத்தில் எல்லையை கடந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் ஏணியைப் பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய எல்லைக்குள் ஊடுரு வியதும், ஏணியை முகமது கபீர் அவான் முற்றும் பஷாரத் என்ற இரு வழிகாட்டிகளிடம் அவர் கள் ஒப்படைத்துள்ளனர். உரியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக 4 தீவிரவாதிகளும் அருகில் உள்ள கிராமங்களில் தங்கி இருந் திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. இதனால் ஜப்லா மற்றும் அதன் அருகில் உள்ள கோஹலன் உள்ளிட்ட கிராமங்களில் ராணுவம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் ராணுவ தலைமைய கத்துக்குள் நுழைவதற்கு முன் பாக செப்டம்பர் 16-ம் தேதி நள்ளிரவு சுக்தார் கிராமத்தில் தங்கி இருந்தபடி வீரர்களின் நடமாட்டத்தைத் தீவிரவாதிகள் கண்காணித்திருப்பதாகவும் கூறப் படுகிறது.

இந்திய வீரர் பலி

ஒரு வார கால இடைவேளைக் குப் பிறகு நேற்று காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.

காஷ்மீர் மாநிலம் ஜம்மு பகுதியில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டருகே இந்திய நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்று சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இத்தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் படையினருக்கு, இந்திய தரப்பில் இருந்து தகுந்த பதிலடி கொடுத்தனர். எனினும், இதில் இந்திய வீரர் ஒருவர் பலியானார்.

25 முறை அத்துமீறல்

கடந்த மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக் குள் இந்திய படையினர் அதிரடியாக நுழைந்து தீவிரவாதி களின் முகாம்களை தாக்கி அழித்த சம்பவத்துக்குப் பின், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் மட்டும், 25 முறை பாகிஸ்தான் படையினர் போர்நிறுத்த ஒப்பந் தத்தை மீறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in