ஜெகன் கட்சி எம்.பி. நிர்வாண வீடியோ விவகாரம் - விசாரணை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவு

ஜெகன் கட்சி எம்.பி. நிர்வாண வீடியோ விவகாரம் - விசாரணை நடத்த குடியரசுத் தலைவர் உத்தரவு

Published on

அனந்தபுரம்: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ஹிந்துபுரம் நாடாளுமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி உறுப்பினராக கோரண்ட்ல மாதவ். இவர், ஒரு பெண்ணுடன் தனது செல்போனில் நிர்வாணமாக பேசுவதாகக் கூறப்படும் வீடியோ புயலை கிளப்பி வருகிறது.

ஆனால், இந்த வீடியோ தான் உடற் பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்டது என எம்பி தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அந்த வீடியோவில் உண்மையிலேயே எம்பி முழு நிர்வாணமாக உள்ளாரா ? இல்லையா ? என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டுமென தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். ஆனால், இதுகுறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எதுவும் கண்டுகொள்ளாததால், பெண்கள் அமைப்பினர், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்தது மட்டுமின்றி, கடந்த 23-ம் தேதி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் மனு அளித்தனர்.

கோரண்ட்ல மாதவ்மேலும், டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்களிடமும் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு ஆந்திர மாநில தலைமைச் செயலாளருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in