Last Updated : 23 Oct, 2016 12:51 PM

 

Published : 23 Oct 2016 12:51 PM
Last Updated : 23 Oct 2016 12:51 PM

2,000 ஆண்டுகள் பழமையான அன்னை மரியாளின் ஓவியம் பெங்களூரு வருகை

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அன்னை மரியாளின் ஓவியம் நேற்று பெங்களூரு கொண்டுவரப்பட்டது. அதை ஆயிரக்கணக்கானோர் வரவேற்று ஆராதித்தனர்.

திருவிவிலியத்தை எழுதிய நற்செய்தியாளர்களில் ஒருவரான புனித லூக்காஸ் சிறந்த ஓவியர். இவர் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்ட இயேசு கிறிஸ் துவின் வாழ்க்கை சம்பவங்களை ஓவியங்களாக வரைந்துள்ளார். மேலும் இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகள் குறித்து நூல்களையும் எழுதியுள்ளார். இந்த ஓவியங்களில் குழந்தை இயேசுவை அன்னை மரியாள் கைகளில் ஏந்தி இருப்பதைப் போன்ற ஓவியம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இயற்கை மூலிகைகளால் வரையப்பட்ட இதை, திருத்தந்தை 9-ம் பத்திநாதர் இடைவிடாத சகாய மரியன்னையாக அறிவித்து, உலகறியச் செய்யும் பணியில் இறங்கினார். இதையடுத்து, மரியன்னையின் திருவுருவப்படம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இப்போதைய திருத்தந்தை பிரான்சிஸ், இதை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் திருத்தலங்களுக்கு கொண்டு செல்ல அனுமதி அளித் தார். இதன்படி கடந்த 19-ம் தேதி கர்நாடகா வந்த இந்த திருவுருவப் படம் நேற்று பெங்களூருவில் உள்ள தூய ஆவியானவர் (சகாய மாதா) ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது மரியன்னையின் திருவுருவப்படத்தை ஆயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் கூடி நின்று வரவேற்றனர். இரட்சகர் சபையில் பெங்களூரு மாகாண தலைவரான அருட்தந்தை அரு ளானந்தர் திருவுருவப்படம் ஆசிர்வதித்த பின்னர், இறை புகழ்ச்சியுடன் ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டது.

இதையடுத்து அருட்தந்தையர் அந்தோணிசாமி, கஸ்பர் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.

இன்று மாலை வரை நடை பெறும் சிறப்பு ஆராதனையில் லட்சக்கணக்கானோர் பங் கேற்று மரியன்னையின் திருவுரு வப்படத்தை வணங்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x