

துல்லியத் தாக்குதல், முதல் முறையாக மத்திய அரசின் அனு மதியுடன் நடத்தப்பட்டதாக முன் னாள் ராணுவ வீரர்கள் இயக்கத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சத்பீர்சிங் கூறியுள்ளார்.
ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் தொடர்பான போராட்டத்தை தனது தலைமையில் நடத்தி வெற்றி கண்ட சத்பீர்சிங் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல் குறித்து தங்கள் கருத்து?
இதுபோன்ற ராணுவ நட வடிக்கைகளில் அரசு செய்திருக் கும் மாற்றம் வரவேற்புக்குரியது. இது பாகிஸ்தான் உடனான பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். தன்னை எதிர்த்து இந்தியா எதுவும் செய்யாது என பாகிஸ்தான் நினைக்கிறது. ஆனால் அவர்கள் செயல் தொடர்ந்தால், இந்தியா இதுபோன்ற ராணுவ நடவடிக்கை யில் ஈடுபடும் என உணர்த்தப்பட் டுள்ளது. தனது அணு ஆயுத சக்தியின் மீதான நம்பிக்கையில் பாகிஸ்தான் கர்வக்குரல் கொடுத்து வருகிறது. இதை எச்சரிக்கும் விதத்தில் நமது ராணுவ நட வடிக்கை அமைந்துள்ளது. பாகிஸ் தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தினாலும், இந்தியா அதற்குப் பதிலடி கொடுக்கும் எனப் புரிய வைக்கப்பட்டுள்ளது. இந்தியா விடம் உள்ள அணு ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் மறைந்து போகும். ஆனால் அணு ஆயுதத்தை முதலில் பயன் படுத்தாமல், பதிலடியாகத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை. இது போல், அணு ஆயுதம் பயன்படுத்து வதில் பாகிஸ்தானிடம் எந்தவொரு கொள்கையும் இல்லை. இதை வைத்து அந்நாடு முதலாவதாகவும் தாக்குதல் நடத்தக் கூடும்.
இதுபோன்ற தாக்குதல்கள் முந்தைய ஆட்சியிலும் நடத்தப் பட்டதாகக் கூறப்படுகிறதே?
இல்லை. இந்தமுறை தான் அரசு ஒரு கொள்கை ரீதியாக முடிவு எடுத்து இதைச் செய்துள் ளது. எல்லைப்புறப் பகுதிகளில் மற்றும் போர் சமயங்களிலும் இதுபோன்ற தாக்குதல் நடைபெற் றுள்ளது. ராணுவ நடவடிக்கை களில் ஒன்றாக அந்தந்த படையின் கமாண்டர் இது தொடர்பாக முடிவு எடுத்து செயல்படுத்துவார். இந்திய எல்லைகளை தாண்டி தாக்குதல் நடத்துவது என்பது மத்திய அரசின் கொள்கை அல்ல. கார்கில் போரின் போதும் இந்திய ராணுவம் எல்லையை தாண்டியது இல்லை. ஆனால், இப்போது ராணுவ நடவடிக்கைக்காக முதன்முறை யாக (போர் சமயம் தவிர) எல்லையைக் கடந்தது மத்திய அரசின் கொள்கை முடிவாகும்.
இதற்கு முன் எல்லை தாண்டி நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
இதற்கு முன் நடத்தப்பட்டதும் எதிரிகள் மீதானது. ஆனால் அவை அப்பகுதிரீதியான தாக்குதல் ஆகும். இதிலும் நம் ராணுவத்தினர் பாகிஸ்தானில் புகுந்து அவர்கள் பதுங்கு குழிகளை அழித்து வந் துள்ளனர். இதில் பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டது உண்டு. ஆனால், இந்தமுறை மத்திய அரசே முன்னின்று முதன்முறையாக இதைச் செய் துள்ளது.
முந்தைய தாக்குதல்களின் நோக்கம் வேறாக இருந்தது என முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளாரே?
தாக்குதல் விஷயத்தில், மேனன் அல்லது இந்நாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவல் போன்றவர்களின் பேச்சுக்கள் மீது நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நமது ராணுவத்தின் செயல்பாடுகள் மீது மட்டும் நான் கருத்து சொல்ல விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை இந்த நடவடிக்கை இந்திய ராணுவம் நடத்தியது. நன்கு திட்டமிட்டு சிறந்த ராணுவ நுணுக்கத்துடன் செய்யப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி யாக பாகிஸ்தானின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?
இதற்கு பாகிஸ்தான் பல்வேறு வகையில் பதிலடி கொடுக்க முயலும். நம்மைப் போல் அவர் களும் எல்லையில் வேறு வகை யான தாக்குதல் நடத்தக் கூடும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ் மீரில் கூடுதலாக ராணுவம் அல்லது தீவிரவாத முகாம்களை அமைத்து தாக்குதல் நடத்த வாய்ப்பு தேடும். மூன்றாவதாக, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லையிலும் ராணுவம் மற்றும் தீவிரவாதப் படைகளை குவித்து இந்தியா மீது போர் தொடுக்கும் சூழலை வலுப்படுத்தும். இவை அனைத்தும் எளிதாக முறியடிக் கும் சக்தி இந்தியாவிடம் இருப்ப தால் பாகிஸ்தானுக்கு இதனால் நஷ்டமே ஏற்படும். செயல்முறை யில் பார்த்தால், இந்தியாவிடம் நட்புறவு கொள்வதை தவிர பாகிஸ் தானிடம் வேறு எந்த வழியும் இல்லை. இதுதான், பாகிஸ் தானின் அரசு, மக்கள் மற்றும் ராணு வத்தினருக்கு மிகவும் நல்லது.
துல்லியத் தாக்குதலில் அமெரிக்கத் தாக்குதல் முறையை இந்தியா பின்பற்றியதாக கூறப் படுகிறதே?
கண்டிப்பாக இல்லை. இந்த விஷயங்களில் இந்தியா எப் போதும் மற்ற நாடுகளின் உதவியை நாடுவது இல்லை. இப்படி செய்வது இந்திய அரசின் கொள்கையும் அல்ல. அமெரிக் காவை விட நமது ராணுவத்தின ரின் நடவடிக்கை மிகவும் துல்லிய மானது. மிகத் திறமையான நமது படையினருடன் நுணுக்கமாக ராணுவ நடவடிக்கை பாய்ந் துள்ளது. இதில், நம் சிறப்பு படையினர் உகந்த தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களுடன் செயல் பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் அரசியல் லாபம் பெற முயற்சிப்பது சரியா?
இந்திய ராணுவத்தினர் எந்த ஒரு அரசியலிலும் பங்கு எடுப்பது இல்லை. எனவே, ராணுவ நட வடிக்கை மீதான அரசியல் புகார்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஆனால், சிலர் இந்த நடவடிக்கைக்கான வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரம் கேட் டிருந்தனர். இது முற்றிலும் தவ றானது. இதுபோல், ராணுவத்தின் மீது விமர்சனம் வைப்பவர்கள் நம் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பவர்கள். எந்த அரசியல் கட்சியினரும் ராணுவத்தை விமர் சிக்கக் கூடாது. இது நம் ராணுவ வீரர்களின் மனவலிமை மீது தாக்கத்தை ஏற்படுத்தி விடும். வேண்டுமானால், சட்டரீதியாக, விசாரணை போன்ற எதையும் நாடாளுமன்றத்தில் கோரலாம். இதைவிடுத்து, வாய்க்கு வந்தபடி வெளியில் பேசுவது மிகவும் தவறானது. இது பாகிஸ்தானுக்குச் சாதகமாகவும் இந்தியாவுக்குப் பாதகமாகவும் அமைந்துவிடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.