எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் தாக்குதல்

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் தாக்குதல்
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில் ஜம்மு, ரஜவுரி மாவட்ட, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் மனீஷ் மேத்தா கூறும்போது, “எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி, ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் தாலுகா பல்லன்வாலா பகுதியில் பிற்பகல் 1.35 மணி முதல், பாகிஸ்தான் படையினர் தாக்குதல் தொடங்கினர்.

இதற்கு முன்னதாக ரஜவுரி மாவட்டம், நவ்ஷெரா பகுதியில் 3 இடங்களில் அதிகாலை 5.15 முதல் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தின.

இப்பகுதிகளில், ஆத்திரமுட்டும் வகை யிலான இத்தாக்குதல்கள் தொடர்கின்றன. இந்தியப் தரப்பில் இவற்றுக்கு உரிய பதிலடி தரப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 5-வது முறையாக அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது” என்றார்.

பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 முறை அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. துப்பாக்கியால் சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 5 அப்பாவி மக்கள் காயம் அடைந்தனர். சில கடைகள் எரிந்து நாசமாயின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in