Published : 28 Aug 2022 06:05 AM
Last Updated : 28 Aug 2022 06:05 AM

நடிகை சோனாலி போகட் மரணம் - கிளப் உரிமையாளர் உட்பட மேலும் 2 பேர் கைது

பனாஜி: ஹரியாணாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட் (42), கடந்த 23-ம் தேதி கோவாவுக்கு நண்பர்களுடன் சுற்றுப்பயணம் சென்றார்.

இந்நிலையில் அவர் வடக்குகோவாவில் உள்ள அஞ்ஜுனாவில் உள்ள புனித அந்தோணி மருத்துவமனையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பலத்த காயம் இருந்ததைத் தொடர்ந்து கோவா போலீஸார் கொலை வழக்காக இதைப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து கோவா போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் கூறும்போது, ‘‘கிளப் ஒன்றில் நடிகை சோனாலி, அவரது உதவியாளர் சுதிர் சங்வான், அவரது நண்பர் சுக்விந்திர் சிங் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அப்போது சோனாலியை அவர்கள் கட்டாயப்படுத்தி குளிர்பானம் குடிக்க வைத்த சிசிடிவி வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன. அதில் போதைப்பொருள் கலந்து கொடுத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்’’ என்றார்.

இதனிடையே, சோனாலி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சோனாலி உடல் நேற்று முன்தினம் ஹிசாரில் உள்ள அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளாமானோர் கலந்துகொண்டு அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, இந்த வழக்கில் அஞ்ஜுனாவில் உள்ள கர்லீஸ் கிளப் உரிமையாளர், போதைப்பொருள் கடத்தல்காரராக சந்தேகிக்கப்படும் தத் பிரஷாத் கவுங்கர் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ஏற்கெனவே கைதான சுதிர் உள்ளிட்ட இருவருக்கும் நீதிமன்றம் 10 நாள் போலீஸ் காவல் வழங்கி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x