Published : 04 Oct 2016 10:14 AM
Last Updated : 04 Oct 2016 10:14 AM

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு: மதுவிலக்கு நீடிக்க நிதிஷ் உறுதி

பிஹாரில் மதுவிலக்கு சட்டத்தை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நிதிஷ்குமார் தலைமை யிலான மாநில அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய் துள்ளது. வரும் 7-ம் தேதி இம்மனு விசாரணைக்கு வருகிறது.

பிஹாரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களுக்கு முழுமையாக தடை விதிக்கும் அறிவிப்பாணையை கடந்த ஏப்ரல் 5-ம் தேதி மாநில அரசு வெளியிட்டது. அன்று முதல் பூரண மதுவிலக்கு பிஹாரில் அமலுக்கு வந்தது.

இதை எதிர்த்து, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்றம், ஏப்ரல் 5-ம் தேதியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து கடந்த 30-ம் தேதி தீர்ப்பளித்தது.

ஆனால் இத்தீர்ப்புக்கு முன்பே, மதுவிலக்கை மேலும் திறம்பட அமல்படுத்தும் நோக்கில், கலால் மற்றும் மதுவிலக்கு சட்டத்தில் புதிய ஷரத்துகளை இணைக்க பிஹார் மாநில அரசு சட்டத் திருத்தங்களை கொண்டுவந்தது.

ஒரு வீட்டில் மது கைப்பற்றப் பட்டால் அக்குடும்பத்தினர் அனை வரையும் வழக்கில் சேர்ப்பது, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு களில் கைது செய்வது போன்ற கடுமையான அம்சங்களுடன், புதிய கலால் மற்றும் மதுவிலக்கு (2016) சட்டத்தைச் சட்டப்பேரவை யின் இரு அவைகளிலும் நிறை வேற்றி, ஆளுநரின் ஒப்புதலும் பெறப்பட்டது.

பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே அறிவித்தபடி, இப்புதிய சட்டம் காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ம் தேதி அறிவிப்பாணையாக வெளியாகி, அன்று முதல் அமலுக்கு வந்தது. எனினும், உயர் நீதிமன்ற உத்தர வைத் தொடர்ந்து, பிஹாரில் மது விலக்கு அமலில் உள்ளதா, இல் லையா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், ‘பாட்னா உயர் நீதி மன்றம் ஏப்ரல் 5-ம் தேதியிட்ட அறிவிப்பாணையை மட்டுமே ரத்து செய்திருக்கிறது. அக்டோபர் 2-ம் தேதி வெளியான புதிய அறி விப்பாணையின் படி, கடுமையான சட்டங்களுடன் புதிய மதுவிலக்கு சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கிறது’ என, பிஹார் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அமைச்சரவையைக் கூட்டிய முதல்வர் நிதிஷ்குமார், மதுவிலக்கைத் தீவிரமாக அமல் படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். கூட்டத் துக்குப் பின் தாமே முன்வந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்த நிதிஷ், ‘மதுவிலக்கு அமல் படுத்திய பின், பிஹாரில் மக்களின் வாழ்க்கை நிலையில் நல்லவித மான மாற்றம் தென்படுகிறது. மது விலக்கை முன்பை விட தீவிர மாக அமல்படுத்த உறுதிபூண்டிருக் கிறோம்’ எனக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, மதுவிலக்கை ரத்து செய்து பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பிஹார் மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, வரும் 7-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x