Last Updated : 20 Oct, 2016 09:55 AM

 

Published : 20 Oct 2016 09:55 AM
Last Updated : 20 Oct 2016 09:55 AM

பிஹாரில் பேய், பிசாசுகளுக்கும் மதுவிலக்கு: முற்போக்குவாதிகள் கிண்டல்

பிஹாரில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் அங்கு பேய் விரட்டும் மந்திரவாதிகளுக்கு மது காணிக்கை செலுத்துவது நின்றுள்ளது. இதனால் பேய்களும் மதுவை விலக்கி வைத்துள்ள தாக கிண்டல் பேச்சு எழுந்துள்ளது.

பிஹார் கிராமங்களில் மக்களிடையே பேய் மற்றும் பிசாசு நம்பிக்கை அதிகமாக உள்ளது. பல கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் கார்த்திக் பூர்ணிமா பண்டிகையின்போது, பேய் திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாக்களில், தங்களை பேய் விரட்டும் மந்திரவாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர், பொது மக்களிடமிருந்து மது மற்றும் மாமிசத்தைக் காணிக்கையாகப் பெற்றுக்கொண்டு பேய் விரட்டு வார்கள். மதுவும் மாமிசமும் பேய்க்கு மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் இதனைக் காணிக்கையாக தருவார்கள்.

பிஹாரில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால், அங்கிருந்த மந்திரவாதிகளுக்கு மது இல்லா மலேயே பேய்களை விரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தலைநகர் பாட்னா அருகே மசவுரி என்ற கிராமத்தில் நடந்த பேய் திருவிழாவில் கலந்து கொண்ட சந்திரகாந்த் யாதவ் இது தொடர்பாக கூறும்போது, “பேய்களுக்கு கோழி இறைச்சி அல்லது ஆட்டு இறைச்சியுடன் சிவப்பு வைன் மிகவும் பிடிக்கும். இவற்றைச் சாப்பிட்ட பிறகே மந்திரவாதிகள் பேயை விரட்டு வார்கள். இந்தமுறை மதுவுக்கு வழியில்லாததால், மதுவை தர வேண்டும் என மந்திரவாதிகள் நிபந்தனை விதிக்கின்றனர். அவ் வாறு தராவிட்டால் பேய் மீண்டும் உங்களைப் பிடித்துக்கொள்ளும் என்றும் மிரட்டுகின்றனர். இதனால் அவர்களின் நிபந்தனையை ஏற்க வேண்டியதாயிற்று” என்றார்.

மசவுரி கிராமத்தில் இந்த பேய் திருவிழாவின் போது ஒரு சிறுமியை பாம்பு கடித்துவிட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இச்சிறுமி உயிரிழந்தார். ஆனால் இச்சிறுமிக்கு பேய் பிடித்திருப்ப தாகவும், அதை விரட்டி சிறுமியின் உயிரைக் காப்பதாகவும் ஒரு மந்திரவாதி கூறியுள்ளார். இது அவரால் முடியாமல் போகவே, மது இல்லாததால் பேய் விலக மறுத்து விட்டதாகக் கூறி அவர் நழுவிய சம்பவமும் நடந்துள்ளது.

இந்த திருவிழாவுக்கு ரகசிய மாக மதுவை கொண்டு வந்தவர் கள் மற்றும் அதை அருந்திய மந்திரவாதிகள் சிலர் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இதை அறிந்த மந்திரவாதிகள் பலர் இதுபோன்ற நிபந்தனையுடன் பேய் விரட்டினர். இவர்களுக்காக, பேய் திருவிழாக்களில் கடைகள் அமைத்து மது விற்பனை செய்யப் படுவது வழக்கம். ஆனால் மது விலக்கு காரணமாக இந்த ஆண்டு விழாக்களில் அரசு முதல்முறை யாக முகாம் அமைத்து மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தது.

இதன்பிறகு முற்போக்குவாதி களின் கேலிப் பேச்சு அதிகரித் துள்ளது. “ஒவ்வொரு ஆண்டும் மதுவின்றி விலகாத பேய்கள் இப்போது விலகியது எப்படி?, பேய்களும் மதுவை விலக்கி வைத்துள்ளனவா?” என்று அவர்கள் கிண்டல் செய்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x