உ.பி.யில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்த பாஜக மறுப்பு

உ.பி.யில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்த பாஜக மறுப்பு
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் கேஷவ் பிரசாத் மவுரியா பரேலியில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

‘உத்தரப் பிரதேசத்தில் பாஜக வின் முதல்வர் வேட்பாளர் யார் என, அனைத்து அரசியல் கட்சி களும் எதிர்பார்த்துள்ளன. ஆனால், தேர்தலுக்கு முன்பாகவே முதல்வர் வேட்பாளரை அறி விக்கக் கூடாது என்பது எங்கள் கட்சியின் தெளிவான கொள்கை.

அஸ்ஸாம், டெல்லியில் முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவித்தோம். அஸ்ஸாமில் வென்றாலும், டெல்லியில் தோற்றுவிட்டோம். ஹரியாணா, ஜார்க்கண்ட்டில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் களமிறங்கினோம்; வென்றோம்.

உத்தரப் பிரதேசத்திலும் இதையே பின்பற்றி, 300-க்கும் அதிகமான இடங்களை கைப் பற்றுவோம். தேர்தலுக்குப் பிறகு, கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி முதல்வரை தேர்வு செய்யும்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in