

கேரள முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தனின் 93-வது பிறந்த நாளையொட்டி மாநில சட்டப்பேரவையில் நேற்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
வழக்கம்போல் வெண்ணிற வேட்டி சட்டையில் நேற்று அச்சுதானந்தன் பேரவைக்கு வந்தவுடன், இளம் உறுப்பினர்கள் பலர், விரைந்து சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பேரவை சார்பில் சபாநாயகர் பி.ராமகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். “அவையின் மூத்த உறுப்பினர் அச்சுதானந்தனுக்கு இன்று 93-வது பிறந்த நாள். அவரை இந்த அவை வாழ்த்துகிறது” என்றார் அவர். ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி உள்ளிட்ட பலர் அவருக்கு தொலை பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில நிர்வாக சீர்திருத்தக் குழு தலைவராக உள்ள அச்சுதானந்தன், நேற்று பேரவையில், ஐ.டி. தொழி லாளர்களின் பிரச்சினையை எழுப் பினர். வி.எஸ். என்று நட்புடன் அழைக்கப்படும் இவர் ஆலப்புழை மாவட்டம், புன்னபுரா என்ற கிரா மத்தில் 1923-ல் பிறந்தார்.
அச்சுதானந்தன்