

ஜம்மு - காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியான ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள மூன்று இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்குதலில் ஈடுபட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "பாகிஸ்தான் படையினர் குடிமக்கள் குடியிருப்புப் பகுதிகள், சர்வதேச எல்லைப் பகுதிகள் உட்பட மூன்று இடங்களில் தானியங்கி ஆயுதங்களையும், பீரங்கி குண்டுகளையும் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
அப்போது, இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் படைகளுடனான இந்தச் சண்டை நள்ளிரவு வரை நீடித்தது" என்றார்.
மேலும், எல்லையோர மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு சமூகக் கூடங்கள், கல்வி நிலையங்களில் போதிய வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.