Published : 22 Jun 2014 10:55 AM
Last Updated : 22 Jun 2014 10:55 AM

‘எத்தகைய சூழலையும் சமாளிப்போம்’: ஜம்மு காஷ்மீர் காவல் துறை தலைவர் பேட்டி

அல் காய்தா தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் உள்ளனர். இது போன்ற எந்த நிலைமையையும் சமாளிப் போம் என ஜம்மு காஷ்மீர் காவல் துறை தலைவர் கே.ராஜேந்திர குமார் தெரிவித்தார்.

நிருபர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது: அல்காய்தா அச்சுறுத்தல் விவகாரத்தில் விழிப்புடன் இருக்கிறோம். தீவிர வாதிகளின் கொடிய திட்டங்களை முறியடிப்போம். எத்தகைய நெருக் கடியான நிலைமையையும் திறம்பட எதிர்கொள்ளும் அளவுக்கு மாநில காவல்துறையும் மத்திய பாதுகாப்புப் படைகளும் தயார் நிலையில் உள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகை யில் தீவிரவாதிகள் ஊடுருவல் குறைந்துள்ளது. இந்த ஆண்டு 10 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். ஊடுருவலை தடுத்து நிறுத்த எல்லையில் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உளவு அமைப் புகளும் செம்மையாக செயல் படுகின்றன என்றார் ராஜேந்திர குமார்.

இராக்கிலும் பாகிஸ்தானி லும் நடைபெறும் தாக்குதல்களை யடுத்து தற்போது வந்துள்ள அச்சுறுத்தல் விவகாரத்தில் போலீ ஸார் எந்த அளவுக்கு கவனம் காட்டுகிறார்கள் என்று கேட்டதற்கு இப்போதைய நிலையில் அது பற்றி பேசுவது நல்லதல்ல என்றார்.

புனிதப்போரில் (ஜிகாத்) காஷ் மீரைச் சேர்ந்த முஸ்லிம்கள் இணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வீடியோவை அல் காய்தா இயக்கத்தின் தலைமை யைச் சேர்ந்த தீவிரவாதிகள் வெளி யிட்டுள்ளனர். முதல் முறையாக காஷ்மீரை அல் காய்தா அமைப்பு குறிவைத்து இத்தகைய வீடியோவை வெளியிட்டுள்ளது.

அமர்நாத் யாத்திரைக்கு தீவிர பாதுகாப்பு

அமர்நாத் யாத்திரைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. இடையூறு வந்தால் முறியடிக்க போதிய பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

முந்தைய ஆண்டுகளை கவனத் தில் கொண்டு யாத்திரை இடை யூறு இன்றி நடைபெற முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. தேவையான படை வீரர்களை மத்திய அரசு அனுப் பியுள்ளது. ராணுவம், எல்லை பாதுகாப்புப்படை, மத்திய ரிசர்வ் போலீஸ், மாநில காவல்துறை ஆகியவை ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன என்றார் ராஜேந்திர குமார். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூன் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி முடிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x