

ஜம்மு காஷ்மீரில் ரஜவுரி மாவட்ட, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில் நேற்று முன் தினம் பாகிஸ்தான் படைகள் பல மணி நேரம் தாக்குதலில் ஈடு பட்டதை தொடர்ந்து, 1300-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
நவ்ஷெரா பகுதியில் உள்ள கல்சியான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுப்பாட்டு எல்லைக் கோட் டுக்கு மிக அருகில் உள்ள இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந் நிலையில் பாகிஸ்தான் படைகளின் தாக்குதல் அபாயம் கருதி இவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக அதி காரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே ஜம்மு, பூஞ்ச், ரஜவுரி மாவட்ட, கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அமைதி நிலவியதாகவும் பாகிஸ்தான் படை யினரின் அத்துமீறல் எதுவுமில்லை என்றும் ராணுவ செய்தித் தொடர் பாளர் தெரிவித்தார்.