

பஞ்சாப் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் பத்து பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் பயணிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து மண்டல ரயில்வே மேலாளர் ஃபெரோஸ்புர் அனுஜ் பிரகாஷ் கூறும்போது, ''ஜம்முவில் இருந்து புனே செல்லும் ரயில் ஜீலம் எக்ஸ்பிரஸ்.
இந்த ரயில் இன்று அதிகாலை 3.05 மணியளவில் பில்லாருக்கும் லதோவாலுக்கும் இடையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தடம் புரண்டது. பத்து ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதில் இரண்டு பயணிகள் காயமடைந்துள்ளனர்'' என்று கூறினார்.
விபத்து குறித்து மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.