

ஜம்மு மாவட்டம், ஆர்.எஸ்.புரா செக்டார், சர்வதேச எல்லைப் பகுதி யில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து தாக்கு தலில் ஈடுபட்டனர். இதில் பீரங்கி குண்டு வெடித்து, பிஎஸ்எப் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஏ.கே. உபாத் யாய காயம் அடைந்தார்.
இதுதவிர ஆர்.எஸ்.புரா பகுதி யில் நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ் தான் தாக்குதலில் 7 பெண்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்த னர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஜம்மு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் தாக்குதல் காரண மாக ஆர்.எஸ்.புரா பகுதியில் சர்வ தேச எல்லையை ஒட்டியுள்ள பல கிராமங்கள் நேற்று வெறிச்சோடின. இங்கு 2 இரவுகள் அச்சத்துடன் கழித்த மக்கள் நேற்று பாதுகாப் பான இடங்களுக்குச் செல்லத் தொடங்கினர். கால்நடைகளைப் பராமரிப்பதற்கு மட்டும் ஓரிருவர் இக்கிராமங்களில் தங்கியுள்ளனர்.
இதனிடையே பிரிவினைவாதி களின் போராட்ட அழைப்பு காரண மாக காஷ்மீரில் நேற்று 110-வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று 144 தடை உத்தரவு மட்டுமே அமலில் இருந்தது. ஊரங்கு உத்தரவு எங்கும் பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. பல இடங்களில் தனியார் வாகனப் போக்குவரத்து இருந்தது. கடைகள் திறந்திருந்தன. என்றாலும் இயல்பு வாழ்க்கை முழு அளவில் திரும்பவில்லை.