ஆந்திராவில் ஏரியில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் ஏரியில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கடப்பா: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பொதுட்டூரை சேர்ந்த பாலசேகர் (17), சஞ்சீவ் குமார் (16), கோபால தாஸ் (18) ஆகிய மூவரும் நண்பர்கள். இவர்கள் நேற்று முன் தினம் புலிவேந்துலா அருகே உள்ள நாமல குண்டா எனும் ஏரியில் குளிக்க சென்றனர். ஆனால் மூவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால் ஏரியின் சகதியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து புலிவேந்துலா ஏரியில் 3 வாலிபர்கள் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in