பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி
Updated on
1 min read

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச், ரஜோரி பகுதிகளில் இன்று ( திங்கட்கிழமை) பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய தரப்பிலும் உரிய பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது,"பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச், ரஜோரி பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பீரங்கி குண்டுகள், தானியங்கி இயந்திரங்களைக் கொண்டு குடியிருப்புப் பகுதிகள், எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய தரப்பில் வலுவான பதிலடி கொடுக்கப்பட்டது" என்றார்.

காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சம்பா, கதுவா, ஜம்மு மாவட்ட சர்வதேச எல்லைப் பகுதிகளில் பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

முன்னதாக, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு பிறகு இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 60 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in