

தம் குடும்பத்தில் திருமணம் எனக் குறிப்பிட்டது தந்தைக்கோ அல்லது அவரது மகனுக்கோ அல்ல, தவிர தமது ஒன்று விட்ட சகோதரருக்கு என காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளரான திக்விஜய்சிங்கின் தம்பி மனைவி ரூபீனா சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து முன்னதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அவர் ட்விட்டரில் இத்தகவலைப் பதிவு செய்துள்ளார்.
அதில், ருபீனா சர்மா தாம் குறிப்பிட்ட திருமணம் தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது பற்றிய அறிவிப்பை திக்விஜய் சிங்கே செய்தியாளர்களுக்கு அறிவிப்பார். அதுவரை அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள் எனவும் ட்விட்டரில் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
திக்விஜயின் தம்பியும் மத்தியப் பிரதேசத்தின் காங்கிரஸ் துணைத் தலைவருமான லஷ்மண்சிங்கின் மனைவி ருபீனா சர்மா. இவர், கடந்த ஜூன் 21-ம் தேதி ட்விட்டரில் ஒரு தகவலைப் பதிவு செய்தார். அதில், , தம் குடும்பத்தில் திருமண மேளம் விரைவில் கேட்கப் போவதாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், ருபீனா குறிப்பிட்ட திருமணம், 67 வயது தந்தை திக்விஜய்சிங்கிற்கா அல்லது அவரது 27 மகன் ஜெய வர்தனா சிங்கிற்கா என பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியது.
இதையடுத்தே ருபீனா அதற்கு விளக்கமளிக்கும் வகையில் தற்போது ட்விட் செய்துள்ளார்.
தொலைக்காட்சி செய்தி யாளரான அமிருதா ராயுடன் திக்விஜய் சிங் நெருக்க மாக இருக்கும் படம் மற்றும் வீடியோவுடன் இணையதளங் களில் செய்தி வெளியானது. இதையடுத்து திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த ஏப்ரலில் இருவரும் ஒப்புக் கொண்டிருந்தது குறிப்பிடத் தக்கது.
இது பற்றிய அறிவிப்பை திக்விஜய் சிங்கே செய்தியாளர்களுக்கு அறிவிப்பார். அதுவரை அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள் எனவும் ட்விட்டரில் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.