

நுகர்வோர் ஏமாறும் வகையில் விளம்பரங்களில் நடிக்க முக்கியப் பிரமுகர்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது.
இதன்படி, விளம்பரம் செய்யப்படும் பொருள் உறுதி அளித்தபடி தரமாக இல்லை என தெரியவந்தால், அந்த விளம் பரத்தில் தோன்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அதிகபட்ச மாக 5 ஆண்டு சிறை தண் டனையும் ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க வேண்டும் என நாடாளு மன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம் பியதால், இதுகுறித்து ஆராய் வதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக் கப்பட்டது.
இந்நிலையில், வேகமாக விற்கப்படும் நுகர்பொருள் தொடர்பான தேசிய கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடந்தது. இதில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பங்கேற்றார்.
மாநாட்டின் இடையே, செய்தி யாளர்களிடம் கூறும்போது, “நுகர் வோரை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் தோன்றும் முக்கிய பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம். இது தொடர்பாக வெளிநாடுகளில் உள்ள சட்டங்களை ஆய்வு செய்தோம். சில நாடுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் தவறான விளம் பரத்தில் தோன்றுபவர்களுக்கு சில நாடுகளில் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப் படுகிறது. அத்துடன் விளம்பரத் தில் தோன்ற வாழ்நாள் தடை யும் விதிக்கப்படுகிறது. இது குறித்த அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை மத்திய அமைச் சரவையிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.