ராமர் கோயில் விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக பதிலடி

ராமர் கோயில் விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக பதிலடி
Updated on
1 min read

தேர்தல் ஆதாயம் கருதி ராமர் கோயில் விவகாரத்தை பாஜக எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், ‘எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க எந்த விவகாரமும் இல்லாததால் இந்தப் புகாரை கூறுகின்றன’ என்று பாஜக பதிலடி தந்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நலின் கோலி நேற்று கூறும்போது, “ராமர் கோயில் விவகாரத்தில் பாஜகவின் நிலைப் பாடு தெளிவானது. நீதிமன்ற உத்தரவு அல்லது ஒருமித்த கருத் தின் அடிப்படையில் இப்பிரச் சினைக்குத் தீர்வு காண முடியும்.

ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள இடங்களை இணைக்கும் சுற்றுலா திட்டத்தை (ராமாயணா சர்க்கியூட்) மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா அறிவித்தது முதல் எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

ராமாயணா சர்க்கியூட் மட்டுமல்ல, புத்தா சர்க்கியூட், கிருஷ்ணா சர்க்கியூட் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க் கட்சிகள் கையில் எடுக்க வேறு விவகாரம் இல்லாததால் பாஜக வுக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டை சுமத்துகின்றன” என்றார்.

ஆர்எஸ்எஸ் கருத்து

ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி பேராசிரியர் ராகேஷ் சின்ஹா கூறும்போது, “மத்திய அரசு அறிவித்துள்ள அருங்காட்சிய கத்துக்கும் ராமர் கோயிலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அயோத்தியில் ராமர் கோயில் என்பது பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகள் தொடர்பானது” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in