

16-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மக்களவைக்கு வந்த காங்கிரஸ் ராகுல் காந்தி கடைசி வரிசையில் அமர்ந்தார்.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து மக்களவை எதிர்கட்சித் தலைவராக இருக்க மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமரும் பகுதியில் கடைசி வரிசையில் உள்ள இருக்கையிலேயே அமர்ந்தார்.
9-வது வரிசையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அர்ஸார் உல் ஹக், சசி தரூர் ஆகியோருடன் ராகுல் அமர்ந்திருந்தார்.
முதல் வரிசையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்.பி.க்கள் வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா ஆகியோர் அமர்ந்திருந்தனர்.