

ஆந்திராவில் அரசு பஸ்ஸை ஓட்டிச்சென்ற டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோதிலும் பஸ்ஸை நிறுத்திவிட்டு உயிரிழந்தார். இதனால் 51 பயணிகள் உயிர் தப்பினர்.
குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிடுகுராள்ளுவில் இருந்து குண்டூருக்கு வியாழக்கிழமை காலை அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்ஸை தஸ்தகிரி என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். சத்தனபல்லி என்ற இடத்தில் பஸ் வந்தபோது டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் பஸ்ஸை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு இருக்கையிலேயே உயிரிழந்தார். அனைவரையும் காப்பாற்றிய டிரைவர் தஸ்தகிரிக்கு பயணிகள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.