பிஹாரில் நடன மங்கைகளுடன் ஆட்டம்: 3 போலீஸார் சஸ்பெண்ட்

பிஹாரில் நடன மங்கைகளுடன் ஆட்டம்: 3 போலீஸார் சஸ்பெண்ட்
Updated on
1 min read

பிஹாரில் தசரா பண்டிகையை ஒட்டி நடந்த கலைவிழாவில் நடன மங்கைகளுடன் ஆட்டம்போட்ட போலீஸார் மூவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.

போஜ்பூர் மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. வைரலான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் 3 போலீஸாரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 'தி இந்து' நாளிதழுக்கு போலீஸ் ஐ.ஜி. நய்யார் ஹுசைன் கான் அளித்தப் பேட்டியில், "போஜ்பூர் மாவட்டத்தில் கோயில்வார் காவல் நிலையத்தைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளோம். அவர்கள் பார் நடன மங்கைகளுடன் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது நடவடிக்கை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல" எனக் கூறியுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் விவரம்:

சஞ்சஜ் சங்கர் தலைமைக் காவலர், துணை காவல் ஆய்வாளர் தேவச்சந்திர சிங், காவலர் பூஷண் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in