

இலவச வைஃஃபை வசதியைப் பயணிகள் அதிகளவில் பயன் படுத்திய இடங்களின் வரிசையில், பாட்னா ரயில் நிலையம் முத லிடத்தை பிடித்துள்ளது. எனினும் இதில் பெரும்பாலானவை ஆபாச இணைய தளங்களுக்கான தேடலாகவே இருந்துள்ளன.
ரயில்வே துறை சார்பில் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இணைய சேவை வழங்க இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப் பட்டது. இதற்காக பிரத்தியேக ரயில்வயர் பிராட்பேண்ட் வினி யோக முறை உருவாக்கப்பட்டு, ரயில்டெல் மற்றும் கூகுள் நிறு வனங்கள் இணைந்து, அதிவேக இணைய சேவையை வழங்கி வருகின்றன.
நாட்டில் முதல்முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலை யத்தில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பல்வேறு முக்கிய நிலையங்களைத் தொடர்ந்து பாட்னா, விசாகப்பட்டினம், ராஞ்சி ஆகிய 3 ரயில் நிலையங்களில் கடந்த மாதம் இப்புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது, நாடு முழுவதும் 23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி உள்ளது. படிப் படியாக அடுத்த 3 ஆண்டுகளில் 400 நிலையங்களுக்கு இவ் வசதியை விரிவுபடுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இலவச வைஃபை வசதியைப் பயணிகள் எந்தளவுக்கு பயன்படுத்தியுள்ள னர் என்பது குறித்த புள்ளி விவ ரங்களை ரயில்டெல் சேகரித் துள்ளது. இதுகுறித்து ரயில்டெல் அதிகாரி ஒருவர் கூறும்போது,
‘இலவச வைஃபை செயல் பாட்டில் உள்ள மற்ற அனைத்து ரயில் நிலையங்களையும் விட, பாட்னாவில் இவ்வசதி அதி களவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இணைய தேடுதல் சேவையைப் பயன்படுத்திய வகையில் பாட்னா ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது.
தேடுதல் சேவையைப் பயன் படுத்தியதில் பாட்னாவுக்கு அடுத்த படியாக ஜெய்ப்பூர் ரயில் நிலை யம் உள்ளது. 3-ம் இடத்தில் பெங்க ளூரு, 4-ம் இடத்தில் டெல்லி ரயில் நிலையங்கள் உள்ளன.
பாட்னா ரயில் நிலையத்தில் யூடியூப் மற்றும் விக்கிபீடியா போன்ற தளங்களை மக்கள் பயன் படுத்தியுள்ளனர். ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட, ஆபாச இணைய தளங்களைத் தேடவும், பார்க்கவும், பதிவிறக்கம் செய்ய வும் பாட்னா ரயில் நிலைய வைஃபை வசதி அதிகளவில் பயன் படுத்தப்பட்டுள்ளது’ என்றார்.