உளவு அமைப்புக்கு கூடாரங்கள் வாங்கியதில் முறைகேடு: மத்திய அமைச்சரின் உதவியாளரிடம் விசாரணை

உளவு அமைப்புக்கு கூடாரங்கள் வாங்கியதில் முறைகேடு: மத்திய அமைச்சரின் உதவியாளரிடம் விசாரணை
Updated on
1 min read

ரா உளவு அமைப்புக்கு ரூ.22 கோடி யில் கூடாரங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப் படும் வழக்கு தொடர்பாக சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்கின் நெருங்கிய உதவி யாளரிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.

கடந்த 2009 முதல் 2013-ம் காலக்கட்டத்தில் ரா உளவு அமைப் பின் கீழ் இயங்கும் சிறப்பு எல்லைப் படையினருக்காக ரூ.22 கோடியில் உயரமான மலைப் பகுதியில் கண்காணிக்க ஏதுவாக தரமான கூடாரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதனை ரா அமைப்புக்கு வாங்கி கொடுப் பதற்காக தற்போதைய வெளி யுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங்கின் நெருங்கிய உதவியாளரான சாம்பு பிரசாத் சிங் என்பவர் வங்கியில் ரூ.30 கோடிக்கு கடன் பெற்றார். அந்த கடனை அவர் செலுத்தவில்லை.

இது தொடர்பாக ரா அமைப்பு நடத்திய முதல்கட்ட விசாரணையில் முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு, பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு கடந்த 2014-ல் லஞ்ச ஒழிப்பு சட்டத் தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

கூடாரங்கள் வாங்குவதற்கான டெண்டர் தயாரிப்பு, கொள்முதல், விநியோகம் என பல விவகாரங் களில் மத்திய அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள், சிறப்பு எல்லைப் படை அதிகாரிகள் பிரசாத்துக்கு சாதகமாக செயல் பட்டிருப்பதும் சிபிஐ-க்கு தெரிய வந்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சாய்பாபா பில்டர்ஸ் நிறுவனத்தின் மூன்று இயக்குநர் களான ஷ்யாம் சுந்தர் பட்டர், ஜே.பி.என்.சிங் மற்றும் மஞ்சரி (சாம்புவின் மனைவி) ஆகியோ ருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்தது.

அதன் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறையும் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக சாம்பு பிரசாத் சிங்கிடம் கடந்த வாரம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், நேற்று மீண்டும் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக் கள் முடக்கப்படும் என அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். வி.கே.சிங்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in