Last Updated : 29 Oct, 2016 03:48 PM

 

Published : 29 Oct 2016 03:48 PM
Last Updated : 29 Oct 2016 03:48 PM

உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்கள் அளவுக்கதிகமாக சென்று விடவில்லை: விளக்கத்திற்கு தயாராகும் மத்திய அரசு

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்ததையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகள் காலியிடங்கள் அளவுக்கதிகமாக அதிகரித்து விடவில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்ற கேள்விகளுக்கான விளக்கங்களுக்குத் தயாராகி வருகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன ஆண்டு சராசரி கடந்த 2 ஆண்டுகளில் சரிவடைந்து விடவில்லை, புதிய நியமனங்கள் ஏப்ரல்-டிசம்பர் 2015 காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் நியமன சராசரி சரிவடைந்து விடவில்லை அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் 906-லிருந்து 1,079ஆக அதிகரித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணிக்காலியிடங்கள் அளவுக்கதிகமாக ஒன்றும அதிகரித்துவிடவில்லை என்றே மத்திய அரசு வட்டாரங்கள் கருதுகின்றன.

மத்திய அரசு நீதித்துறையை மிகவும் மதிக்கிறது அதன் தனித்துவத்தை மதிக்கிறது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெளிவு படுத்தியுள்ளன. அனுமதியளிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை ஜூன் 2014-ல் 906 தற்போது ஜூன் 2016-ல் 1079.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதான ஒரு சித்திரத்தை ஊடகங்கள் தோற்றுவிப்பதாகவும், ஆராய்ந்து பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் நீதிபதிகள் பணிக்காலியிடங்கள் அளவுக்கதிகமாக அதிகரிக்கவில்லை என்பதே புலப்படும் என்று மத்திய அரசு தனது பதிலை தயார் செய்து வைத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் காலியிடங்காள் 265லிருந்து 280 என்று இருந்துள்ளது.

அதே போல் பணியாற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை இதே காலக்கட்டத்தில் 600 என்று உள்ளது. தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 620ஆக உள்ளது.

“மேலும் கடந்த 2 ஆண்டுகளில் 173 புதிய நீதிபதிகள் பணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2009-2014-ல் உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் 20 ஆகவே இருந்தது. ஆனால் 2015-2016-ல் 173 புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று அரசு தரப்பு தன் தரப்பு வாதங்களுக்கு தயாராகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x