குஜராத் கடல் பகுதியில் நுழைந்த பாக். மீனவர் 9 பேர் சுற்றிவளைப்பு

குஜராத் கடல் பகுதியில் நுழைந்த பாக். மீனவர் 9 பேர் சுற்றிவளைப்பு
Updated on
1 min read

இந்திய கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 9 பேர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

குஜராத் மாநிலம், புஜ் நகரை ஒட்டிய கடற்படகுதியில் மீன்பிடிப் படகில் காணப்பட்ட இவர்களை பிஎஸ்எப் ரோந்துப் படையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

“படகில் ஆட்சேபனைக்குரிய பொருள் எதுவும் இல்லை. மீனவர்களிடம் விசாரணை நடை பெற்று வருகிறது” என்று தகவல் கள் தெரிவிக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in