

பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக நவம்பர் 11-ம் தேதி ஜப்பான் செல்கிறார்.
இது குறித்து நேற்று அறிவித்த வெளியுறவு அமைச்சகம், ‘‘ஜப்பானுடன் ஆக்கப்பூர்வ அணுசக்தி உடன்பாடு தவிர, வர்த்தகம், உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளிலும் இரு தரப்புக்கும் இடையே வலுவான நட்புறவை ஏற்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளது.
நவம்பர், 11, 12 தேதிகளில் இந்தச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் மன்னரையும், பிரதமர் ஷின்சோ அபேவையும் சந்தித்து பேசுகிறார். பின்னர் வருடாந்திர உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார்.