ஏழுமலையான் வங்கிக் கணக்கில் 35 கிலோ வெளிநாட்டு நாணயங்கள்

ஏழுமலையான் வங்கிக் கணக்கில் 35 கிலோ வெளிநாட்டு நாணயங்கள்
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையானின் வங்கிக் கணக்கில் 35 கிலோ வெளிநாட்டு நாணயங்கள் சமீபத்தில் டெபாசிட் செய்யப் பட்டன.

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானுக்கு ஏழைகள் முதல் செல்வந்தர் கள் வரை உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின் றனர். பழங்காலத்தில் ஆரத்தி தட்டில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது மட்டுமே வழக்க மாக இருந்துள்ளது. ஆங்கிலே யர் ஆட்சிக் காலத்தில்தான் ஏழுமலையானுக்கு உண்டியல் வைக்கப்பட்டதாக சரித்திரம் தெரிவிக்கிறது.

காணிக்கை அதிகரிப்பு

தொடக்கத்தில் மதியம் நைவேத்திய நேரம், இரவு ஏகாந்த சேவை நேரம் என தினமும் 2 முறை மட்டுமே உண்டியல் மாற்றப்பட்டு வந்துள்ளது. முதல்முறையாக கடந்த 1958-ம் ஆண்டு நவம்பர் மாதம் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை ரூ.1 லட்சத்தை தாண்டியது. பின்னர் இது படிப்படியாக அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு சராசரியாக ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி வரை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது தினமும் 12 முறை உண்டியல் மாற்றப்படுறது. உண்டியல் காணிக்கை மூலம் மட்டுமே தேவஸ்தானத்திற்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி முதல் ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கிறது.

பக்தர்களின் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்தாலும் திருமலையில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் மட்டும் இடம் மாறவில்லை. இதற்கு வாஸ்து காரணம் என்று அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர். முக்கிய விசேஷ நாட்களில் உண்டியல் காணிக்கை ரூ.5 கோடியை கடக்கிறது. இதனால் தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் கர்ப்பகிரத்தைச் சுற்றிலும் கூடுதல் உண்டியல் வைக்காமல் உள்ளதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அண்மைக்காலமாக தேங்கி யிருந்த 35 கிலோ வெளிநாட்டு நாணயங்கள் சமீபத்தில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in