Published : 11 Oct 2016 11:53 am

Updated : 11 Oct 2016 12:30 pm

 

Published : 11 Oct 2016 11:53 AM
Last Updated : 11 Oct 2016 12:30 PM

சட்டத்துக்கு உட்பட்டு பசு பாதுகாப்பில் ஈடுபடுக: ஆர்எஸ்எஸ் தலைவர்

பசு பாதுகாவலர்கள் சட்டத்துக்கு உட்பட்டு பசு பாதுகாப்பில் ஈடுபடுமாறு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்ட தினம் ஆண்டுதோறும் தசரா பண்டிகையின்போது கொண்டாடப்படுகிறது.


91-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாக்பூரில் உரையாற்றிய மோகன் பாகவத், "மோடி ஆட்சியில் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை உதயமாகியுள்ளது. நம் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. சிறிய விவகாரங்களையும் ஊதிப் பெரிதாக்கி எத்ர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. ஆனால், நாட்டின் முன்னேற்றம் குடிமக்களின் கைகளில்தான் இருக்கிறது.

ஜெயின் சமூகம் உட்பட பல்வேறு சமூகங்களில் பசு பாதுகாப்பு கடைபிடிக்கப்படுகிறது. பசு பாதுகாவலர்கள் நல்லவர்களே. ஆனால் பசு பாதுகாப்பில் ஈடுபடும்போது சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். சிலர் பசு பாதுகாவலர்கள் என்று போலியாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கின்றனர்" என்றார்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து பேசும்போது, "காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளை பாகிஸ்தானே இயக்குகிறது. காஷ்மீரின் பெரும்பாலான பகுதி அமைதியாகவே இருக்கிறது. ஒரு சில இடங்களில் பிரிவினைவாதிகள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். பிரிவினைவாதிகளை பாகிஸ்தானே இயக்குகிறது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

காஷ்மீர், பலூசிஸ்தான் விவகாரங்களில் மத்திய அரசின் நிலைப்பாடு மிகச் சரியானது. அதேபோல் எல்லையில் ராணுவத்தினரின் துல்லிய தாக்குதலுக்காக அவர்களை வெகுவாக பாராட்டுகிறேன். ஒரு சிறிய கவனக் குறைவுகூட எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும். எல்லைப் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவுகள் சிறப்பானவை. எல்லை பாதுகாப்புப் படையினர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்பினை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இந்தப் பணியில் மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு உதவ வேண்டும்" என்றார்.

"கட்சிகள் அரசியலில் ஈடுபடும்போது மிகக் கவனமாக செயல்பட வேண்டும். மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக திசை திருப்பி அரசியல் செய்யக்கூடாது. சமூக ஒற்றுமையைப் பேணுவதில் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது" என அவர் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, "கல்வித் துறையில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. நம் சமூகத்தில் வேறுபாடுகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் கலாச்சாரமே அதுதான். வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நமது கலாச்சார அடையாளத்தை பேணிக் காப்பது நம் அனைவரது கடமையும்கூட" என்றார்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



பசு பாதுகாப்புஆர்எஸ்எஸ் தலைவர்மோகன் பாகவத்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author