மீனவர்கள் பிரச்சினை: இந்தியா - இலங்கை நவ.5-ல் பேச்சு

மீனவர்கள் பிரச்சினை: இந்தியா - இலங்கை நவ.5-ல் பேச்சு

Published on

தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியா, இலங்கை இடையே அமைச்சரவை நிலையி லான பேச்சுவார்த்தை வரும் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

இலங்கை கடல் பகுதியில் நுழைவதாக குற்றம் சாட்டி ஏராள மான தமிழக மீனவர்களை அந்த நாட்டு கடற்படை பிடித்து வருகிறது. மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, இலங்கை இடையே நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இந்தியா, இலங்கை இடையே அமைச்சரவை நிலையிலான பேச்சுவார்த்தையை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதற்காக இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா தலைமையில் 10 பேர் கொண்ட இலங்கை குழு வரும் 2-ம் தேதி டெல்லி வருகிறது.

வரும் 5-ம் தேதி இரு நாடு கள் இடையே அமைச்சரவை நிலை யிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தியத் தரப்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தைக்கு தலைமையேற்பார் என்று தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in