பெங்களூரு விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி வீரரிடம் கெடுபிடி: செயற்கை காலை கழற்ற வைத்து சோதனை

பெங்களூரு விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி வீரரிடம் கெடுபிடி: செயற்கை காலை கழற்ற வைத்து சோதனை
Updated on
1 min read

ஆசிய பாரா சைக்கிள் சாம்பியன்ஷிப் 2013 போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று வெள்ளிப் பதக்கத்தை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் ஆதித்ய மேத்தா. சமீபத்தில் இவர் பெங்களூருவில் உள்ள கெம்பெகவுடா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தபோது பாதுகாப்பு அதிகாரிகள் அவர் அணிந்திருந்த செயற்கை கால் பகுதியை கழற்றிக் காண்பிக்கும் படி தெரிவித்தனர். மிகுந்த வலியுடன் அந்தச் செயற்கை கால் பகுதியை அவர் கழற்றி காண்பித்தார். அத்துடன் இது தொடர்பாக உயரதிகாரிகளிடமும் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஹைதராபாத் செல்வதற்காக செவ்வாய்க் கிழமை அதிகாலை கெம்பெ கவுடா விமான நிலையத்துக்கு ஆதித்ய மேத்தா வந்துள்ளார். அப்போதும் அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரது செயற்கை கால் பகு தியை கழற்றிக் காண்பிக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். செயற்கை காலை கழற்றி மீண்டும் பொருத்து வதால் ஏற்படும் வலியையும், வேதனையையும் அவர் விவரித்தபோதும், பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து பிடி வாதமாக இருந்துள்ளனர்.

இது குறித்து ஆதித்ய மேத்தா கூறும்போது, ‘‘அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் காயங்கள் இருப்பதைக் காண்பித்தும் பாதுகாப்பு அதிகாரிகள் அதை பொருட்படுத்தவில்லை. அது எனது பிரச்சினை என்று தெரி வித்துவிட்டனர். செயற்கை காலைக் கழற்றி மீண்டும் அணி வதற்கு எனக்கு 40 நிமிடங்கள் ஆகிவிட்டது. தவிர ரத்த கசிவும் ஏற்பட்டது. கடந்த முறை கண் டிப்புடன் நடந்து கொண்ட அதே அதிகாரி, இந்த முறையும் மனம் இரங்கவில்லை. மற்ற விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் இப்படி என்னிடம் நடந்து கொண்டதில்லை’’ என்றார்.

விமானப் பயணத்தால் ஆதித்ய மேத்தா முதல்முறை சங்கடத்தில் சிக்கியபோது, மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக பெங்களூரு விமான நிலையத்தில் முழு உடல் சோதனைக்கான ஸ்கேனர் கருவியை வைக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்தது. ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு வாய்ப்பு இல்லை என மழுப்பி வரு கின்றனர். ‘‘மருத்துவ மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியாவின் எந்தவொரு விமான நிலையத்திலும் முழு உடல் சோதனைக்கான ஸ்கேனர் கருவி வைக்கப்படவில்லை. அதே விதி பெங்களூரு விமான நிலையத்திலும் பின்பற்றப்படு கிறது’’ என்கின்றனர்.

இந்த சங்கடத்தால் ஆதித்ய மேத்தா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

பாராசைக்கிள் வீரர் ஆதித்ய மேத்தா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in