இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் தலாக் நடைமுறைக்கு இடமில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் தலாக் நடைமுறைக்கு இடமில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை
Updated on
1 min read

‘மதச்சார்பற்ற நாடாக இந்தியா திகழ்வதால், முஸ்லிம்களின் தலாக் நடைமுறைக்கு இடமளிக்கக் கூடாது’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள், திருமணம், விவா கரத்து, வாரிசுரிமை போன்ற விவ காரங்களில் முஸ்லிம் தனிச் சட்ட விதிகளை பின்பற்ற, இந்திய அரசிய லமைப்பு அனுமதி வழங்குகிறது.

எனினும், முஸ்லிம் தனிச் சட்டத் தின்படி, 3 முறை தலாக் கூறி மனைவியை, கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறையால் ஏராள மான முஸ்லிம் பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக மகளிர் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுபோன்ற தலாக் நடைமுறை யால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சயாரா பானு மற்றும் ஜெய்ப்பூர், கொல்கத்தா நகரங்களைச் சேர்ந்த 2 பெண்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. இம்மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே பதில் அளித்த முஸ்லிம் அமைப்புகள், ‘முஸ்லிம் தனி நபர் சட்டம், புனித குரான் மற்றும் ஷரியத் சட்டத்தின் மூலமாக வடிவமைக்கப்பட்டது. சீர் திருத்தங்கள் என்ற பேரில் இவற்றை மாற்ற முடியாது. நீதிமன்றங்கள் இதில் தலையிட அதிகாரமில்லை’ எனக் கூறியிருந்தன.

இவ்விஷயத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந் தது. மத்திய அமைச்சர்கள் குழு இதுகுறித்து விரிவாக விவாதித்து, நேற்று தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதில், ‘தலாக் நடைமுறையை, மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக கருத வேண்டியதில்லை. தலாக் நடைமுறை பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் இரு பாலாருக்கும் சம உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இப்பிரச்சினையை நோக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டமே பிரதானமாக திகழும், இந்தியா போன்ற மதச் சார்பற்ற நாட்டில், தலாக் நடைமுறைகளுக்கு இடமளிக்கக் கூடாது’ எனக் கூறப்பட்டிருந்தது.

பொதுமக்களிடம் கருத்து கேட்பு

இதற்கிடையே, தலாக் நடைமுறையை ஒழித்துக்கட்டுவது மற்றும் நாடு முழுவதும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து, சட்டக் கமிஷன் சார்பில் பொதுமக்களிடம் நேற்று கருத்து கோரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in