

இராக்கில் சிக்கியுள்ள இந்தியர்க ளின் பாதுகாப்புக்கான முயற்சிக ளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் மத்திய அரசு, பாரசீக வளை குடாவில் போர்க்கப்பல் ஒன்றை தயார் நிலையில் நிறுத்தி வைத் துள்ளது.
டெல்லியில் நெருக்கடி கால நிர்வாக குழு வெள்ளிக்கிழமை கூடி விவாதித்த பிறகு பாரசீக வளை குடாவில் போர்க் கப்பலை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டதை அடுத்து ஐஎன்எஸ் மைசூர் கப்பல் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற்படையிடம் ஐஎன்எஸ் தர்கஸ் என்ற போர்க்கப்பலும் உள்ளது. இது ஏடன் வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இந்த இரு கப்பல்களும் இராக்கிலிருந்து இந்தி யர்களை மீட்டு வருவதற்கான பணியில் ஈடுபடுத்தப்படும்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை அமைச்சரவைச் செயலர் தலை மையில் நடந்த நெருக்கடி கால நிர்வாக குழு கூட்டத்தில் இராக்கி லிருந்து இந்தியர்களை மீட்டு வருவதற்கான சாத்தியம் பற்றி விவாதிக்கப்பட்டது.
மீட்பு நடவடிக்கைக்கு அனுப்பும் படி உத்தரவு வந்தால் தம்மிடம் உள்ள சி17, தி-130ஜே சூப்பர் ஹெர் குலிஸ் விமானங்களை இராக் அனுப்ப இந்திய விமானப்படையும் தயாராக இருப்பதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இராக்கில் 3 அலுவலகங்கள்
இராக்கில் சண்டை தீவிர மடைந்து வருவதால் போர் நடக் காத பகுதிகளிலிருந்து அங்குள்ள 10 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்ப உதவியாக 3 முகாம் அலுவலகங்களை இந்தியா அமைத்துள்ளது. இந்த தகவலை வெளியுறவு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். அவர் கூறியதாவது: கடத்தப்பட்டு பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள் 39 பேரும் பத்திரமாக உள்ளனர்.
பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றி முக்கிய தகவல்கள் கிடைத்துள் ளன. திக்ரித்தில் தவிக்கும் 46 நர்ஸ் பணியாளர்களுடன் தொடர்பில் உள்ளது இந்திய தூதரகம். போர் நடக்கும் பகுதிகளில் சுமார் 100 இந்தியர்கள் இருப்பார்கள் என்றே கணக்கிடுகிறோம்.
புதிதாக அமைக்கப்படும் முகாம் அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள் இந்தியர்கள் வேலை பார்க்கும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்கள் விரும்பினால் இந்தியா திரும்ப உதவுவார்கள். பயணத்துக்கு பணம் இல்லை என்றால் இலவசமாகவே விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து உரிய பயண ஆவணங்களை வழங்க அமைச்சகம் வழி செய்யும்.
இவ்வாறு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.