அமித் ஷா-ஜூனியர் என்டிஆர் சந்திப்பு: தெலுங்கு சினிமாவின் ரத்தினம் என புகழ்ச்சி

அமித் ஷா-ஜூனியர் என்டிஆர் சந்திப்பு: தெலுங்கு சினிமாவின் ரத்தினம் என புகழ்ச்சி
Updated on
1 min read

ஹைதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்திப்பு ஞாயிறு அன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அமித் ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘தெலுங்கு சினிமாவின் ரத்தினம்’ என ஜூனியர் என்டிஆரை அவர் புகழ்ந்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அவருக்கு உலக அளவில் பாராட்டுகளை பெற்றுத் தந்தது. இந்நிலையில், ஹைதராபாத் நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்கும் விதமாக சென்றுள்ளார் அமித் ஷா.

இந்த கூட்டம் முடிந்ததும் ஜூனியர் என்டிஆரை அவர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது. அமித் ஷா-ஜூனியர் என்டிஆர் சந்திப்பு சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

“ஹைதராபாத் நகரில் திறமையான நடிகரும், நமது தெலுங்கு சினிமாவின் ரத்தினமுமான ஜூனியர் என்டிஆருடனான நல்லதொரு சந்திப்பு அமைந்தது” என அமித் ஷா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in