வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிக நிறுத்தம்

வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அன்சுல் கார்க் கூறியது:

கனமழை காரணமாக கத்ராவில் இருந்து வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பக்தர்கள் மேல்நோக்கி வருவது நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பவான் பகுதியில் சன்ஜிசத் நோக்கி கீழே வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். அதன் விளைவாக, பேட்டரி வாகன பாதையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கோயில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அன்சுல் கார்க் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in