Last Updated : 10 Oct, 2016 11:08 AM

 

Published : 10 Oct 2016 11:08 AM
Last Updated : 10 Oct 2016 11:08 AM

பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு: தலைவராக பி.எஸ்.ராகவன் நியமனம்

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம், பி.எஸ்.ராகவன் தலை மையில் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (என்எஸ்ஏபி) கடந்த 1998-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அப்போது வாரியத்தின் ஒருங் கிணைப்பாளராக கே.சுப்பிர மணியம் பொறுப்பு வகித்தார். அதன்பிறகு வாரிய உறுப்பினர் களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. சரண் என்பவர் தலைமையில் 14 உறுப்பினர்களு டன் தேசிய பாதுகாப்பு ஆலோ சனை வாரியம் செயல்பட்டது. தற்போது மத்தியில் பாஜக தலைமையில் பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, என்எஸ்ஏபி.யின் உறுப்பினர் எண்ணிக்கையை தலைவர் உட்பட 4 ஆக குறைத்துவிட்டது.

இந்நிலையில், முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஷியாம் சரண் தலைமையில் இயங்கி வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் பதவிக் காலம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைந்துள்ளது. அதற்குப் பதில் இப்போது ராகவன் தலைமையில் புதிய வாரியம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில், புதிதாக என்எஸ்ஏபி கடந்த வாரம் உருவாக் கப்பட்டது. அதன் தலைவராக பி.எஸ்.ராகவன் நியமிக்கப்பட்டுள் ளார். இவர் ரஷ்யாவுக்கான இந்திய தூதராக பணியாற்றியவர். மேலும், புதிய வாரியத்தின் உறுப்பினர்களாக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு புலனாய்வுப் பிரிவு (ரா) முன்னாள் அதிகாரி ஏ.பி.மாத்தூர், லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எஸ்.எல்.நரசிம்மன், குஜராத் தேசிய சட்ட பல்கலைக்கழக பேராசிரியர் பிமல் என் படேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோ சனை வாரியம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள், ராணுவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பொரு ளாதார விவகாரங்கள் குறித்த அரசுக்கு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்கும். அந்த பரிந்துரைகள், ஆலோசனைகளை தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆராய்ந்து இறுதி முடிவெடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x