Last Updated : 15 Oct, 2016 06:28 PM

 

Published : 15 Oct 2016 06:28 PM
Last Updated : 15 Oct 2016 06:28 PM

இரு புதிய நண்பர்களைவிட ஒரு பழைய நண்பரே சிறந்தவர்: புதின் முன்னிலையில் ரஷ்யாவுக்கு மோடி புகழாரம்

இந்தியா - ரஷ்யா இடையே, போர்க் கப்பல், எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவது, கூட்டாக ஹெலிகாப் டர்கள் தயாரிப்பது உட்பட 16 ஒப்பந் தங்கள் சனிக்கிழமை கையெழுத்தானது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு கோவா மாநிலம் பெனாலிம் நகரில் சனிக்கிழமை தொடங்கியது.

முன்னதாக இதில் பங்கேற்பதற் காக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இரு நாடுகளுக்கிடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். அப்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது மற்றும் சர்வதேச பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் துறை சார்ந்த 3 மெகா ஒப்பந்தங்கள் உட்பட மொத்தம் 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இதில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்குவது மிகவும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தமாகும்.

இதுதவிர, ஏவுகணைகளை ஏவும் வசதி கொண்ட 4 நவீன போர்க்கப்பல்கள் வாங்குவது மற்றும் கமோவ் ரக ஹெலி காப்டர்களை கூட்டு முயற்சியில் தயாரிப்பது ஆகியவை மற்ற 2 முக்கிய ஒப்பந்தங்கள் ஆகும். இது தவிர வர்த்தகம், முதலீடு, ஹைட்ரோ கார்பன், விண் வெளி, ஸ்மார்ட் சிட்டி ஆகிய துறைகளில் இரு நாடு களுக்கிடையே உள்ள உறவை பலப் படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த சந்திப் புக்குப் பிறகு கூட்டறிக்கை வெளி யிடப்பட்டது. பிரதமர் மோடி கூறியதாவது:

தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட வேண்டும் என்பதில் ரஷ்யாவும் தெளிவான நிலைப்பாடுகொண்டுள்ளது. இந்த பிராந்தியத்துக்கே அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள எல்லை தாண்டிய தீவிர வாதத்துக்கு எதிராக இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவளித்த ரஷ்யாவுக்கு மனமார்ந்த நன்றி.

தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவற்றுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக போரிட வேண்டும் என இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. இவ்வாறு அவர் தெரி வித்தார். ரஷ்ய அதிபர் புதின் கூறும் போது, “தீவிர வாதத்தை எதிர்த்துப் போரிட இரு நாடு களும் இணைந்து செயல்படும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் காணொலி காட்சி மூலம், கூடங்குளம் அணுமின் நிலை யத்தின் 2-வது பிரிவை நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தனர். மேலும் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது பிரிவு களுக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் காணொலி காட்சி மூலம் பார்த்தனர்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற் காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்துள்ளார். இந்த மாநாட்டின் நடுவே, பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x