குடும்ப சூழ்நிலையால் ராணுவத்தில் சேர முடியவில்லை - வீரர்களிடம் மனம் திறந்தார் ராஜ்நாத் சிங்

மணிப்பூர்  பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைநகர் இம்பாலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரை நேற்று சந்தித்து பேசினார். படம்: பிடிஐ
மணிப்பூர் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைநகர் இம்பாலில் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரை நேற்று சந்தித்து பேசினார். படம்: பிடிஐ
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூர் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். அவருடன் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவும் சென்றுள்ளார். அங்கு அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவினரை சந்தித்த ராஜ்நாத் சிங் அவர்களிடம் பேசியதாவது:

நானும் ராணுவத்தில் சேர விரும்பினேன். இதற்காக குறுகிய கால சேவையில் பணியாற்ற தேர்வும் எழுதினேன். அந்த நேரத்தில் என் தந்தை இறந்தார். எனது குடும்பத்தில் நிலவிய சில சூழல் காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை.

நீங்கள் ஒரு குழந்தையிடம் ராணுவ சீருடையை கொடுத்தால், அதன் குணாதியசங்களில் மாற் றங்கள் ஏற்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். அந்த அளவுக்கு இந்த சீருடை மீது ஒரு ஈர்ப்பு உள்ளது.

சமீபத்தில் டோக்லாம் பகுதியில் இந்திய-சீன வீரர்கள் இடையே நடந்த அனைத்து விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கும், அப்போதைய ராணுவதளபதிக்கும்தான் நமது வீரர்களின் துணிச்சல் தெரியும். நமது வீரர்களின் அந்த தைரியத்துக்காக, நாடு உங்களுக்கு கடன்பட்டிருக்கிறது. இவ்வாறு பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in