

மகதாயி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் பிரச்சினை நீடிக்கும் நிலையில், கோவாவில் கன்னடர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்துக்கும் கோவா மாநிலத்துக்கும் இடையே பாயும் மகதாயி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையேயும் பிரச்சினை நீடிக்கிறது. மகதாயி நதியில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கோவா மாநிலத்தைக் கண்டித்து வட கர்நாடக மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதேபோல கோவாவிலும் கர்நாடகாவை கண்டித்து போராட்டங்கள் வலுத் துள்ளன.
இந்நிலையில் கோவா மாநிலத் தில் டிஸ்க் உகோவா பகுதியில் வசித்த 5 கன்னட குடும்பத்தினரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கி யது. மேலும் 5 கன்னட குடும்பங் களின் வீடுகள் தாக்கப்பட்டு 3 இரு சக்கர வாகனங்களும், 3 கார்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கோவா போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு கர்நாடக அரசியல் கட்சியினரும், கன்னட அமைப்பினரும், விவசாய சங்கத் தினரும் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். தார்வாட் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸார் ஆங் காங்கே கோவா அரசை கண்டித்து நேற்று போராட்டம் நடத்தினர். கன்னட அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக கோவாவில் இருந்து கர்நாடகாவுக்கு செல்லும் பேருந்து கள் அம்மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.
இதேபோல கர்நாடகாவில் இருந்து கோவாவுக்கு செல்லும் பேருந்துகள் மங்களூரு, ஹூப்ளி, கார்வார், பெலகாம் ஆகிய பகுதி களில் நிறுத்தப்பட்டன. பெல்காமில் விவசாய அமைப்பினரின் போராட்டத்தைத் தொடர்ந்து இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் துணை ராணுவ படையினர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.