

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 85-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
அதில், ‘ஒவ்வொரு இந்தியரின் எண்ணங்களையும் கவர்ந்த நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு, அவரின் பிறந்த நாளில் அஞ்சலி செலுத்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி பிறந்த, ஏ.பி.ஜே.அப்துல்கலாம், கடந்தாண்டு ஜூலை 17-ம் தேதி இறந்தார்.
இந்திய அணுசக்தி மற்றும் விண்வெளித் துறையில் மிகப்பெரும் பங்களிப்பை வழங்கி, இந்தியாவின் ஏவுகணை மனிதராகத் திகழ்ந்த அவர், நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக 2002 ஜூலை 25 முதல் 2007 ஜூலை 25-ம் தேதி வரை பொறுப்பேற்றிருந்தார்.