

முசாபர்நகரில் மாவட்ட பாஜக தலைவர் ஓம்வீர் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து அங்கு கலவர தடுப்பு பிரிவு போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
முசாபர்நகரை சேர்ந்த பாஜக மாவட்ட நிர்வாகி ஓம்வீர், இன்று மீராப்பூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஓம்வீரை சுட்டு கொன்றனர்.
இவரது கொலையை அடுத்து முசாபர்நகரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை குறித்த பின்னனி இன்னும் வெளியாகாத நிலையில், இது குறித்து தீவிர விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது பாஜக தலைவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
முசாபர்நகரில் நடந்துள்ள இந்த சம்பவத்தால், அங்கு வன்முறை ஏற்படாமல் இருக்க முசாபர்நகரின் அனைத்து பகுதிகளுக்கும் கலவர தடுப்பு பிரிவு போலீசார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.